திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள திருக்குறுங்குடி குட்டிகரிச்சான் குளத்தில் இறைச்சிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டப்படுவதால் கடும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதியில் உள்ள 125 ஏக்கர் விவசாய நிலங்கள் மற்றும் கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, நிலத்தடி நீரும் பெருமளவு மாசடைந்து வருகிறது. குளத்தில் கழிவுகளைத் கொட்டும் சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனப் பொதுமக்களும் விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


