வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் மாணவர் திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் மற்றும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் செயல்பட்டு வரும் திருவள்ளுவர் பல்கலைக்கழக மேலாண்மைத் துறையும், புதுச்சேரி யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனமும் இணைந்து மாணவர் திறன் மேம்பாட்டுப் பயிலரங்கத்தை நடத்தின. இதில் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
இப்பயிலரங்கில் மாணவர்களுக்குக் கல்வியுடன் இணைந்து வருமானம் ஈட்டுதல், தனித்திறன்களை வளர்த்தல் மற்றும் நிதிச் சுதந்திரம் அடைவது குறித்து விரிவான விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பல்கலைக்கழக உள் புகார்கள் குழுவும் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனமும் இணைந்து, ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கான இலவச மருத்துவப் பரிசோதனை முகாமை நடத்தின. இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயனடைந்தனர்.





