தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (CITU - CPI) சார்பில், ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்கள் சந்திப்பு வாகன பிரச்சார இயக்கம் நடத்தப்பட்டது.
நம்பியூர் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற இப்பிரச்சார இயக்கத்திற்கு, ஏஐடியுசி கிளைத் தலைவர் பாண்டியன் தலைமை தாங்கினார். இதில் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தின் மூலமாகப் பொதுமக்களுக்கு வரவிருக்கும் சவால்கள் மற்றும் பாதிப்புகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

