மதுரை தெற்கு வாசல் பகுதியில் பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை விழா அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் மதுரை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் இன்ஜினியர் எம்.எம்.கோபிசன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
விழாவின் ஒரு பகுதியாகப் பொதுமக்களுக்குப் பெருமளவில் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தெற்கு வாசல் பகுதிச் செயலாளர் சிவா உள்ளிட்ட தவெக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

