ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் நடைபெற்ற பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 119-வது பிறந்தநாள் மற்றும் 64-வது குருபூஜை விழாவில், இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் நேரில் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தமிழக அரசு சார்பில் அதிகாரப்பூர்வ அரசு விழாவாகக் கொண்டாடப்படும் இந்நிகழ்ச்சிக்காக, இன்று காலை 9 மணி அளவில் ஹெலிகாப்டர் மூலம் பசும்பொன் வந்தடைந்த சி.பி. ராதாகிருஷ்ணன், அங்கு அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் இறங்குதளத்தில் தரையிறங்கினார். அதனைத் தொடர்ந்து, முத்துராமலிங்க தேவர் நினைவிடத்திற்குச் சென்று அவர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

