தஞ்சாவூர் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் திட்டத்தில், குடியிருப்புப் பகுதிகள் வழியாக சாலை அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
ஆய்க்குடி மற்றும் தைக்கால் கிராமங்கள் வழியாக சாலை விரிவாக்கம் மேற்கொள்ளப்பட்டால், அப்பகுதியில் உள்ள வீடுகள், கோயில்கள், ஐந்துக்கும் மேற்பட்ட நீர்நிலைகள் மற்றும் மக்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படும் என்று பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.
மேலும், புறவழிச்சாலை அமைப்பதற்கு மாற்று வழிகள் உள்ளதாகவும், ஊருக்குள் சாலை அமைக்கும் திட்டத்தைக் கைவிட்டு புறவழிச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இதில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் பரிந்துரை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

