திருவாரூர் மாவட்ட பல்நோக்கு உள் விளையாட்டு அரங்கத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில், அடல் வயோ அப்யுதயா யோஜனா திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான உயிருள்ள காட்சிச் சித்திரப் போட்டி நடத்தப்பட்டது.
தலைமுறைகளுக்கு இடையிலான நல்லிணக்கத்தை வளர்ப்பதுடன், மூத்த குடிமக்களின் கண்ணியமான வாழ்வை வலியுறுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்ச்சிக்கு, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தலைமை தாங்கினார்.
போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களைப் பாராட்டிய மாவட்ட ஆட்சியர், அவர்களுக்குப் பங்கேற்புச் சான்றிதழ்களை வழங்கினார். மூத்த குடிமக்களை மதித்தல், அவர்களுடன் அன்பாகப் பழகுதல் மற்றும் தலைமுறைகளுக்கு இடையிலான உறவை மேம்படுத்துதல் போன்ற சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்நிகழ்ச்சி வெற்றிகரமாக அமைந்தது.
