பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது ஜெயந்தி மற்றும் 64-வது குருபூஜையை முன்னிட்டு, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது சிலைக்கு உசிலம்பட்டி சட்டப்பேரவை உறுப்பினரும், தவெக மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான SOP.விஜய் மகாலிங்கம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்வில் தமிழக வெற்றிக் கழகத்தின் பல்வேறு நிர்வாகிகளும் தொண்டர்களும் திரளாகக் கலந்துகொண்டனர். அதனைத் தொடர்ந்து, தேவரின் தியாகங்களைப் போற்றும் வகையில் நினைவூட்ட உரைகள் நிகழ்த்தப்பட்டன.

