இந்தியா
ஆம்பூரில் விஜயபாரத மக்கள் கட்சி சார்பில் பசும்பொன் தேவர் ஜெயந்தி விழா!
🕒 30 அக்., 2026, 09:08 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

📸செய்தி புகைப்படங்கள் (Photo Gallery - 2 படங்கள்):
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில், விஜயபாரத மக்கள் கட்சி சார்பில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.மேலும் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் ஏ.எஸ். ஆனந்தன் தலைமை தாங்கினார். நகரத் தலைவர் ஏ.டி. ஏழுமலை வரவேற்றார். மாநிலச் செயலாளர் கே. சசிகுமார், மாவட்ட துணைத்தலைவர் ஜி. பிரபாகரன், மாவட்ட செயலாளர் பி. குமரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் கட்சியின் நிறுவனர் கோ.ஸ்ரீ. ஜெய்சங்கர் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு தேவர் திருவுருவப் படத்திற்கு பூஜைகள் செய்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தேவர் புகழ் பரப்புரை செய்தார்.இந்நிகழ்வில் பாஜக மூத்த தலைவர் கா. சிவப்பிரகாசம், மாநில வழக்கறிஞர் பிரிவு அமைப்பாளர் வில்வநாதன்,மாவட்ட இளைஞரணி தலைவர் கோபி யாதவ் மற்றும் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

