மதுரை மாவட்டம் மேலூரில் காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் நம்ம மதுரை நம்ம போலீஸ் என்ற தலைப்பில் ஐந்து கிலோ மீட்டர் தூரம் கொண்ட மாபெரும் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர் சிறுமியர் என இரு பிரிவுகளாகவும் 14 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் பெண்கள் என இரு பிரிவுகளும் மொத்தம் நான்கு பிரிவுகள் நடைபெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு மொத்தம் 40 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணமும், வெற்றிக் கோப்பை மரக்கன்றுகளை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்த பின்பரிசுகளை வழங்கினார். மேலும் மேலூர் முக்கியஸ்தர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
செய்திகள்
காவல்துறை சார்பில் நடந்த மாரத்தான் போட்டி!
🕒 31 அக்., 2026, 07:00 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

📸செய்தி புகைப்படங்கள் (Photo Gallery - 2 படங்கள்):

