Settings

முகப்பு/செய்திகள்/திருவிடைக்கழி முருகன் கோயில் குளம்: 50 ஆண்டுகளாக பராமரிப்பின்றி அவதி
செய்திகள்

திருவிடைக்கழி முருகன் கோயில் குளம்: 50 ஆண்டுகளாக பராமரிப்பின்றி அவதி

🕒 31 அக்., 2026, 05:56 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
திருவிடைக்கழி முருகன் கோயில் குளம்: 50 ஆண்டுகளாக பராமரிப்பின்றி அவதி

📸செய்தி புகைப்படங்கள் (Photo Gallery - 2 படங்கள்):

✨

AI Highlights

  • •மயிலாடுதுறை திருவிடைக்கழி முருகன் கோயில் குளம் 50 ஆண்டுகளாகப் பராமரிப்பின்றி உள்ளதால், அதனைச் சீரமைத்து பூங்கா அமைக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

மயிலாடுதுறை அருகே திருவிடைக்கழி முருகன் கோயிலுக்குச் சொந்தமான நான்கு ஏக்கர் பரப்பளவு கொண்ட குளம், பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் ஆகாயத்தாமரைகள் படர்ந்து, குப்பைகள் நிறைந்து பயனற்றுக் கிடக்கிறது. இதனை சீரமைத்து நடைபாதை மற்றும் பூங்கா அமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும் என பக்தர்களும் பொதுமக்களும் கோரிக்கை :- மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா திருவிடைக்கழி கிராமத்தில் சோழநாட்டு திருச்செந்தூர் எனப் போற்றப்படும் மிகவும் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. சிவபெருமானும் முருகப்பெருமானும் ஒரே சன்னதியில் அருள்பாலிப்பதும், திருக்குராவடி மரம் தலவிருட்சமாக அமைந்திருப்பதும் இக்கோயிலின் தனிச்சிறப்பாகும். பல்வேறு சிறப்புகளை உடைய இக்கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மேலும் சிறப்பு விசேஷ நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், காவடிகள் எடுத்தும் வந்து நேர்த்தி கடன் செலுத்துவது வழக்கம். இந்நிலையில் இக்கோயிலுக்கு சொந்தமான சுமார் நான்கு ஏக்கர் பரப்பளவு கொண்ட குளம், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக முறையாகத் தூர்வாரப்படாமலும், பராமரிப்பின்றியும் கிடப்பதாகக் கூறப்படுகிறது. குளம் முழுவதும் ஆகாயத்தாமரைகள் படர்ந்து, குப்பைகள் தேங்கியுள்ளதால் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பிரசித்தி பெற்ற இக்கோயில் குளத்தை முழுமையாகத் தூர்வாரி சீரமைப்பதுடன், குளத்தைச் சுற்றிலும் நடைபாதை, பூங்கா மற்றும் நான்கு புறங்களிலும் படித்துறைகள் அமைத்து முறையாகப் பராமரிக்க வேண்டும். இதன் மூலம் பக்தர்களும் பொதுமக்களும் பயன்பெறும் வகையில் குளத்தை மேம்படுத்த இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பக்தர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔