கோவையில் உள்ள பெரியார் அறிவுலகத்தை தி.மு.க தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார்.
கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வந்துள்ள மு.க.ஸ்டாலின், திராவிட கழகத் தலைவர் கி.வீரமணியுடன் இணைந்து பெரியார் அறிவுலகத்திற்குச் சென்று பார்வையிட்டார்.
கோவையில் பெரியார் அறிவுலகம் கட்டப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், திராவிடர் கழகம் சார்பில் கி.வீரமணி தலைமையில் மு.க.ஸ்டாலினுக்கு இன்று மாலை பாராட்டு விழா நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

