Settings

முகப்பு/ஆன்மீகம்/பாரம்பரிய களிகம்பு நடனத்துடன் கோலாகலமாக நடைபெற்ற கீழராமநதி தர்ஹா சந்தனக்கூடு திருவிழா!
ஆன்மீகம்

பாரம்பரிய களிகம்பு நடனத்துடன் கோலாகலமாக நடைபெற்ற கீழராமநதி தர்ஹா சந்தனக்கூடு திருவிழா!

🕒 29 அக்., 2026, 11:26 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
பாரம்பரிய களிகம்பு நடனத்துடன் கோலாகலமாக நடைபெற்ற கீழராமநதி தர்ஹா சந்தனக்கூடு திருவிழா!
✨

AI Highlights

  • •ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கீழராமநதி தர்ஹா சந்தனக்கூடு திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் பாரம்பரிய களிகம்பு நடனத்துடன் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கீழராமநதியில் அமைந்துள்ள மஹான் ஜிந்தா மதார் ஒலியுல்லாஹ் தர்ஹாவின் சந்தனக்கூடு திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இத்திருவிழாவை முன்னிட்டு ஜும்மா பள்ளிவாசல் மற்றும் தர்ஹா பகுதி வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

விழாவின் முக்கிய நிகழ்வாக, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சந்தனம் நிரப்பப்பட்ட குடம், பெரிய பள்ளிவாசலில் இருந்து அதிகாலை 2 மணிக்கு ஊர்வலமாகப் புறப்பட்டது. மின் விளக்குகளால் ஒளிரச் செய்யப்பட்ட இந்தச் சந்தனக்கூடு ஊர்வலம், கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக விடிய விடிய வலம் வந்து அதிகாலையில் தர்ஹாவை அடைந்தது.

இந்த ஊர்வலத்தில் கிராமத்தைச் சேர்ந்த இஸ்லாமியப் பெரியவர்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் என ஏராளமானோர் உற்சாகத்துடன் பங்கேற்றனர். மேளதாளங்களுடன் தங்களின் ஊரின் சிறப்புகளைப் பாடியவாறு அவர்கள் ஊர்வலமாகச் சென்றனர்.

ஊர்வலத்தின் சிறப்பம்சமாக, தமிழர்களின் பாரம்பரிய கலையான களிகம்பு நடனம் நூற்றுக்கும் மேற்பட்டோர்களால் நிகழ்த்தப்பட்டது. கிராமத்தின் நான்கு முக்கிய இடங்களில் கயிற்றைக் கட்டி, அதற்கு ஏற்ப களிகம்பு நடனமாடி, ஜடை போல் பின்னி மீண்டும் அதனை அவிழ்த்து ஆடிய இந்த நாட்டியக் கலை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இக்கிராமத்தில் தொன்றுதொட்டு நடைபெற்று வரும் இந்த பாரம்பரிய நிகழ்வைக் காண, வெளி ஊர்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் வருகை தந்திருந்தனர். இதனைத் தொடர்ந்து கந்தூரி வைபவம் நடைபெற்றது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔