திருவண்ணாமலை தீபத் திருவிழாவின்போது பக்தர்களுக்குத் தேவையான வசதிகளைக் கண்காணிக்க, பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தக் குழுவானது, விழாவின்போது பக்தர்களுக்காக அமைக்கப்படும் காத்திருப்புக்கூடங்கள், உணவுக் கூடங்கள், உடைமைகள் வைக்கும் அறைகள் மற்றும் கழிவறை வசதிகள் உள்ளிட்டவற்றை முறையாகக் கண்காணிக்க வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

