Settings

முகப்பு/ஆன்மீகம்/2 கி.மீ தூரம் தீர்த்தக்குடம் ஏந்தி நடந்த அமைச்சர்: நாமகிரிப்பேட்டையில் பக்தி பரவசம்
ஆன்மீகம்

2 கி.மீ தூரம் தீர்த்தக்குடம் ஏந்தி நடந்த அமைச்சர்: நாமகிரிப்பேட்டையில் பக்தி பரவசம்

🕒 31 அக்., 2026, 07:39 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
2 கி.மீ தூரம் தீர்த்தக்குடம் ஏந்தி நடந்த அமைச்சர்: நாமகிரிப்பேட்டையில் பக்தி பரவசம்
✨

AI Highlights

  • •நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையில் உள்ள ஸ்ரீ மாசி பெரியண்ணன் பெரியசாமி கோவில் கும்பாபிஷேக விழாவில் அமைச்சர் பங்கேற்று தீர்த்தக்குடம் ஏந்தி வழிபாடு நடத்தினார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை அடுத்த சங்கராந்தி கரட்டில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மாசி பெரியண்ணன் பெரியசாமி திருக்கோவிலில், ஆலய பரிவார தெய்வமான ஸ்ரீ குதிரை வாகனத்திற்கு மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக கால்நடைத்துறை அமைச்சர் கமலி கலந்து கொண்டு, சுமார் 2 கிலோமீட்டர் தூரம் தீர்த்தக்குடம் எடுத்தபடி நடந்து சென்று கோவிலை அடைந்தார். தொடர்ந்து கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இந்த மகா கும்பாபிஷேக விழாவில் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔