ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் ஐப்பசி தேர் திருவிழா – பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் ஊர்வலம்... நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில், நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் ஐப்பசி தேர் திருவிழாவை முன்னிட்டு, வன்னியர் குல சமூகத்தினர் சார்பில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் 500-க்கும் மேற்பட்டோர் தாம்பூலத் தட்டுகளுடன் பங்கேற்றனர். ராசிபுரத்தில் பழமைவாய்ந்த நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் எப்போதும் கம்பம் நடப்பட்டிருப்பதால், இங்குள்ள அம்மனை நித்திய சுமங்கலி மாரியம்மன் என பக்தர்கள் அழைத்து வருகின்றனர். இக்கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, நடப்பாண்டு திருவிழா கடந்த 21ஆம் தேதி பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு தினந்தோறும் கட்டளைதாரர்கள் சார்பில் அம்மன் ஊர்வலம் நடைபெற்று வருகிறது. அதன்படி, வன்னியர் குல சமூகத்தினர் சார்பில் நடைபெற்ற கட்டளை நிகழ்ச்சியில், ராசிபுரம் மேட்டுத் தெரு 17-வது வார்டில் இருந்து பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளச் செய்யப்பட்டார். தொடர்ந்து பெரியசாமி கடை, சின்ன கடைவீதி, பெரிய கடைவீதி உள்ளிட்ட பல்வேறு வீதிகள் வழியாக அம்மன் ஊர்வலம் நடைபெற்றது. வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். மேலும், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாரம்பரிய நடனமாடி ஊர்வலத்தை உற்சாகப்படுத்தினர். ஊர்வலம் மீண்டும் கோவிலை வந்தடைந்ததைத் தொடர்ந்து, நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் 500-க்கும் மேற்பட்டோர் தாம்பூலத் தட்டுகளுடன் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும், விழாக்குழுவினரும் செய்திருந்தனர்.
ஆன்மீகம்
பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் பவனி வந்த அம்மன்: ராசிபுரத்தில் கோலாகலமாக நடந்த தேர் திருவிழா!
🕒 31 அக்., 2026, 03:58 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

✨
AI Highlights
- •நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் ஐப்பசி தேர் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் வீதியுலா சென்றார்.
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
