அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த மீன்சுருட்டி கடைவீதியில், ஊழல் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு பாப்பாக்குடி பவர் கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
மத்திய ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் ஆலோசனையின்படி நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பொதுமக்கள் லஞ்சம் வாங்குவதை தவிர்க்க வேண்டும் மற்றும் ஊழலை ஒழிக்க வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, கலைக்குழுவினர் தாத்தா மற்றும் பாட்டி வேடமணிந்து பாரம்பரிய நாட்டுப்புறக் கலைகள் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். குறிப்பாக, லஞ்சம் கொடுக்காமல் முதியோர் உதவித்தொகை பெற்றது குறித்த அவர்களின் செயல்முறை விளக்கம் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

