Settings

முகப்பு/நகரங்கள்/பணிகளைத் திருடுவதாகக் குற்றச்சாட்டு: நெல்லையில் சுகாதார செவிலியர்கள் அதிரடி ஆர்ப்பாட்டம்!
நகரங்கள்

பணிகளைத் திருடுவதாகக் குற்றச்சாட்டு: நெல்லையில் சுகாதார செவிலியர்கள் அதிரடி ஆர்ப்பாட்டம்!

🕒 3 நவ., 2026, 07:06 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
பணிகளைத் திருடுவதாகக் குற்றச்சாட்டு: நெல்லையில் சுகாதார செவிலியர்கள் அதிரடி ஆர்ப்பாட்டம்! - படம் 1
📸1 / 1
✨

AI Highlights

  • •நெல்லை வண்ணார்பேட்டையில் இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள் பணியிடங்களை அகற்றக் கோரி சமுதாய சுகாதார செவிலியர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

நெல்லை வண்ணார்பேட்டையில், சுகாதாரத் துறையில் இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள் பணியிடங்களை அகற்றக் கோரி தமிழ்நாடு அரசு கிராம பகுதி சமுதாய சுகாதார செவிலியர்கள் கூட்டமைப்பு சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக சுகாதாரத் துறையின் கீழ் இயங்கும் துணை சுகாதார நிலையங்களில் பணியாற்றும் இடைநிலை சுகாதார பணியாளர்களின் பணியிடங்களை முழுமையாக அகற்ற வேண்டும் என்பது இவர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. மேலும், கிராமப் பகுதி சமுதாய சுகாதார செவிலியர்கள் மேற்கொள்ளும் பணிகளை, தாங்கள் செய்ததாகக் கணக்கு காட்டும் இடைநிலை சுகாதார பணியாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

தமிழகத்தில் கிராமப் பகுதியில் பணியாற்றும் சமூக சுகாதார செவிலியர்கள், தாய் சேய் நலப் பணிகள் மற்றும் குடும்ப நலமுறை பணிகளைத் தொடர்ந்து கவனித்து வருகின்றனர். ஆனால், இப்ப பணிகளைத் தாங்களே செய்து வருவதாகக் கூறி இடைநிலை சுகாதார பணியாளர்கள் மத்திய, மாநில அரசுகளுக்குத் தவறான அறிக்கைகளை அனுப்பி வருவதாகவும், இதனை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தின் போது முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்திற்குத் தமிழ்நாடு அரசு கிராம பகுதி சமுதாய சுகாதார செவிலியர்கள் கூட்டமைப்பின் மாவட்டத் தலைவர் தீனம்மாள் ஜார்ஜ் தலைமை தாங்கினார். கூட்டமைப்பின் துணைத் தலைவர் ஸ்டெல்லா மற்றும் செயலாளர் அஜிதா ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔