கொலை, POCSO மற்றும் கூட்டுக் கொள்ளை உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தருவதில் சிறப்பாகப் பணியாற்றிய ஐந்து காவல்துறையினரை நெல்லை சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் இரா. திருநாவுக்கரசு நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் நிலைய கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை பெற்றுத் தர நீதிமன்றப் பணியைச் சிறப்பாக மேற்கொண்ட தலைமைக் காவலர் க. செல்வி பாராட்டப்பட்டார். அதேபோல், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய POCSO வழக்கில் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுத் தர சிறப்பாகப் புலனாய்வு செய்த காவல் ஆய்வாளர் வே. விஜயலட்சுமி மற்றும் நீதிமன்றப் பணியை மேற்கொண்ட தலைமைக் காவலர் ஜே. ஸ்டெல்லா மேரி ஆகியோரும் பாராட்டப் பெற்றனர்.
மேலும், கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய POCSO வழக்கில் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுத் தர நீதிமன்றப் பணியைச் சிறப்பாக மேற்கொண்ட தலைமைக் காவலர் இரா. அமுதா, வீரவநல்லூர் காவல் நிலைய கூட்டுக் கொள்ளை வழக்கில் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுத் தர சிறப்பாகப் புலனாய்வு செய்த காவல் ஆய்வாளர் க. முருகன் ஆகியோரும் கௌரவிக்கப்பட்டனர்.
இந்தக் காவல்துறையினரின் சே பாராட்டுக்குரியது எனக் குறிப்பிட்டு, திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் இரா. திருநாவுக்கரசு (இ.கா.ப) அவர்களை இன்று (அக்.31) சரக அலுவலகத்திற்கு நேரில் அழைத்து பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார்.

