திருப்பத்தூர் மாவட்டம் மாடப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் திருப்பதி (68). கால்நடை மருத்துவரான இவர், சுமார 20 ஆண்டுகளாக அதிமுகவில் பணியாற்றி வந்தார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததை அடுத்து, கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த இவர், தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார்.
திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு மக்கள் நலப் பணிகளை மேற்கொண்டு வரும் எம்.எல்.ஏ. திருப்பதி, சமீபத்தில் திருப்பத்தூரில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு உடல்நிலை சரியில்லாமல் கொண்டு வரப்பட்ட மாடு மற்றும் நாய்க்குத் தானே நேரடியாகச் சென்று சிகிச்சை அளித்தார். சற்றும் யோசிக்காமல் கால்நடைகளுக்கு மருத்துவம் பார்த்த அவரது வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

