Settings

முகப்பு/நகரங்கள்/40 ஆண்டுகளாக யாசகம் பெற்று ரூ.1.65 கோடிக்கு மேல் உதவி செய்த முதியவர்! நெகிழ்ச்சி சம்பவம்!
நகரங்கள்

40 ஆண்டுகளாக யாசகம் பெற்று ரூ.1.65 கோடிக்கு மேல் உதவி செய்த முதியவர்! நெகிழ்ச்சி சம்பவம்!

🕒 23 நவ., 2026, 08:21 AM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு
40 ஆண்டுகளாக யாசகம் பெற்று ரூ.1.65 கோடிக்கு மேல் உதவி செய்த முதியவர்! நெகிழ்ச்சி சம்பவம்! - படம் 1 - The News Outlook
📸1 / 3
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (3)படத்தைத் தொடவும்
✨

AI Highlights

  • •தூத்துக்குடியைச் சேர்ந்த முதியவர் பூல்பாண்டியன், தான் யாசகம் பெற்று சேர்த்த ரூ.10 ஆயிரத்தை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரிடம் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கினார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர், தான் யாசகம் பெற்று சேர்த்த தொகையை தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டம் ஆலங்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் பூல்பாண்டியன் (65). இவர் யாசகம் பெற்று கிடைக்கும் பணத்தை பொதுமக்களின் நலனுக்காகவும், தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கும் தொடர்ந்து வழங்கி வருகிறார். அந்த வகையில், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் நல்லசிவனிடம் நிவாரண தொகையாக ரூ.10,0ங்காயை அவர் வழங்கினார்.

அப்போது, யாசகம் பெற்று பொதுமக்களுக்கு உதவி செய்யும் பூல்பாண்டியனின் சேவையை மாவட்ட ஆட்சியர் நல்லசிவம் பாராட்டினார். மேலும், "அளவுக்கு அதிகமாக பணம் வைத்திருப்பவர்களுக்குக் கூட மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் வருவதில்லை. ஆனால், நீங்கள் யாசகம் பெற்று பொதுமக்களுக்கு உதவ வேண்டும் என்று நினைக்கும் உங்கள் நல்ல மனதிற்கு இந்த ஜென்மம் மட்டுமல்லாமல் அடுத்த ஜென்மத்திலும் நல்லது நடக்கும்" என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதியவர் பூல்பாண்டியன், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக யாசகம் பெற்று அதன் மூலம் பொதுமக்களுக்கு உதவி செய்து வருவதாகத் தெரிவித்தார். குறிப்பாக, கொரோனா காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் பொது நிவாரண நிதிக்கு பணம் வழங்கியதை அவர் நினைவுகூர்ந்தார்.

இதுவரை 22 மாவட்டங்களில் உள்ள 470 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளுக்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் கொடிநாள் நிதி உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலப் பணிகளுக்காக மொத்தம் ரூ.1 கோடியே 65 லட்சம் வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார். மக்கள் சேவைக்காகத் தொடர்ந்து முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்கி வருவதாகவும் அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியின் போது, அங்கு பணியில் இருந்த திருப்பத்தூர் நகர காவல் நிலைய ஆய்வாளர் சௌந்தர்ராஜன், பூல்பாண்டியனிடம் தன் பங்காக ரூ.500 வழங்கி, அதையும் நிவாரண நிதியாகச் சேர்த்து வழங்குமாறு கேட்டுக்கொண்டார். யாசகம் பெற்று கிடைக்கும் பணத்தைத் தன்னலம் கருதாமல் பொதுமக்களின் நலனுக்காகத் தொடர்ந்து வழங்கி வரும் இந்த முதியவரின் சேவை மனப்பான்மை அங்கிருந்த அனைவரிடேயும் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
செய்தி எதிரொலியால் விழித்துக்கொண்ட கரூர் மாநகராட்சி: மயானத்தில் மின்விளக்குகள் பொருத்தம்!நகரங்கள்

செய்தி எதிரொலியால் விழித்துக்கொண்ட கரூர் மாநகராட்சி: மயானத்தில் மின்விளக்குகள் பொருத்தம்!

Anandakumar🕒 நவ. 22
மேலூர் மலைகளைக் காக்க வேண்டிய பொறுப்பு எனக்கு வந்தது: சகாயம் ஐஏஎஸ் நெகிழ்ச்சிநகரங்கள்

மேலூர் மலைகளைக் காக்க வேண்டிய பொறுப்பு எனக்கு வந்தது: சகாயம் ஐஏஎஸ் நெகிழ்ச்சி

Vijay🕒 நவ. 21
ஆம்பூர் நகராட்சியில் ஆட்சியரின் திடீர் ஆய்வு - பாதாளச் சாக்கடைத் திட்டம் குறித்து முக்கிய அறிவுறுத்தல்!நகரங்கள்

ஆம்பூர் நகராட்சியில் ஆட்சியரின் திடீர் ஆய்வு - பாதாளச் சாக்கடைத் திட்டம் குறித்து முக்கிய அறிவுறுத்தல்!

ARAVINDHAN🕒 நவ. 21
வாடிப்பட்டி அருகே இராமையன்பட்டி கோயில்களில் மகா கும்பாபிஷேக விழா கோலாகலம்!நகரங்கள்

வாடிப்பட்டி அருகே இராமையன்பட்டி கோயில்களில் மகா கும்பாபிஷேக விழா கோலாகலம்!

Vijay🕒 நவ. 21
இடைத்தேர்தல் தேவையற்றது; 2வது இடம்பிடித்தவரை எம்.எல்.ஏவாக அறிவிக்க வேண்டும்: வேல்முருகன் வலியுறுத்தல்!செய்திகள்

இடைத்தேர்தல் தேவையற்றது; 2வது இடம்பிடித்தவரை எம்.எல்.ஏவாக அறிவிக்க வேண்டும்: வேல்முருகன் வலியுறுத்தல்!

Arivazhagan🕒 நவ. 23
மக்களின் கோரிக்கை: டிசம்பர் 2-ல் களமிறங்கும் இந்திய கம்யூனிஸ்டு கட்சிசெய்திகள்

மக்களின் கோரிக்கை: டிசம்பர் 2-ல் களமிறங்கும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி

Rajan🕒 நவ. 23
சொத்துக்காக பெற்ற தாயை அடித்துத் துன்புறுத்தும் மகன்கள்! நாகப்பட்டினத்தில் ஷாக் சம்பவம்!செய்திகள்

சொத்துக்காக பெற்ற தாயை அடித்துத் துன்புறுத்தும் மகன்கள்! நாகப்பட்டினத்தில் ஷாக் சம்பவம்!

Sugumaran🕒 நவ. 23
சபரிமலை சென்ற பக்தர்கள் மீது மோதிய பேருந்து: இருவர் பலி, சோகத்தில் விழுப்புரம்செய்திகள்

சபரிமலை சென்ற பக்தர்கள் மீது மோதிய பேருந்து: இருவர் பலி, சோகத்தில் விழுப்புரம்

Arivazhagan🕒 நவ. 23
TNO வாட்ஸ்அப் சானல் ➔