Settings

முகப்பு/நகரங்கள்/ஈமச்சடங்கு முடிந்து திரும்பிய முதியவர் மீது லாரி மோதி சோகம்!
நகரங்கள்

ஈமச்சடங்கு முடிந்து திரும்பிய முதியவர் மீது லாரி மோதி சோகம்!

🕒 2 நவ., 2026, 05:57 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
ஈமச்சடங்கு முடிந்து திரும்பிய முதியவர் மீது லாரி மோதி சோகம்! - படம் 1
📸1 / 1
✨

AI Highlights

  • •திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சாலையைக் கடக்க முயன்ற 85 வயது முதியவர் மீது ஈச்சர் வாகனம் மோதிய விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சாமன்னன் (85). இவர் தனது உறவினரின் ஈமச்சடங்கில் கலந்துகொண்டுவிட்டு வீடு திரும்ப முயன்றபோது, அப்பகுதியில் சாலையைக் கடந்துகொண்டிருந்த வேளையில், வேலூரிலிருந்து வாணியம்பாடி நோக்கி வந்த ஈச்சர் வாகனம் அவர் மீது மோதியது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சாமன்னனை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் கிராமிய காவல் நிலையப் போலீசார், உயிரிழந்த சாமன்னனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔