Settings

முகப்பு/நகரங்கள்/தீபாவளி ஷாப்பிங்: ஈரோட்டில் களைகட்டிய ஜவுளி சந்தை - பாதுகாப்பு தீவிரம்!
நகரங்கள்

தீபாவளி ஷாப்பிங்: ஈரோட்டில் களைகட்டிய ஜவுளி சந்தை - பாதுகாப்பு தீவிரம்!

🕒 2 நவ., 2026, 11:51 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
தீபாவளி ஷாப்பிங்: ஈரோட்டில் களைகட்டிய ஜவுளி சந்தை - பாதுகாப்பு தீவிரம்! - படம் 1
📸1 / 1
✨

AI Highlights

  • •வரும் 8ஆம் தேதி தீபாவளி பண்டிகையை ஒட்டி ஈரோட்டில் புத்தாடைகளை வாங்க லட்சக்கணக்கான மக்கள் குவிந்துள்ளனர். பாதுகாப்புக்காக 1,000 காவல்துறையினர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

மஞ்சள் விவசாயம் மற்றும் ஏற்றுமதிக்கு புகழ்பெற்ற ஈரோட்டில், வரும் 8ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளதை ஒட்டி, புத்தாடைகளை வாங்க லட்சக்கணக்கான பொதுமக்கள் குவிந்துள்ளனர். இதனால் அங்கு ஜவுளி விற்பனை தீவிரமடைந்துள்ளது.

ஈரோடு நகரில் பன்னீர்செல்வம் பூங்கா, மணிக்கூண்டு, ஈஸ்வரன் கோவில் வீதி, திருவேங்கடசாமி வீதி மற்றும் காவிரி சாலை ஆகிய முக்கியப் பகுதிகளில் ஏராளமான ஜவுளி கடைகள் இயங்கி வருகின்றன. ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் தங்களுக்குத் தேவையான புத்தாடைகளை வாங்குவதற்காக இக்கடைகளில் அதிகளவில் திரண்டுள்ளனர்.

பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் பொருட்டு, ஈரோடு நகரக் காவல் துறையின் சார்பில் 15க்கும் மேற்பட்ட இடங்களில் உயர் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், சிசிடிவி கேமராக்கள் மற்றும் ட்ரோன் கேமராக்கள் மூலமாகவும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் 1,000 காவல்துறினரும், நகர் பகுதியில் மட்டும் நகர காவல் துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் தலைமையில் 300க்கும் மேற்பட்ட காவல்துறினரும் பாதுகாப்பு மற்றும் ஒழுங்குப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔