விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகேயுள்ள டி.என். சல்வார்பட்டி கிராமத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 119-வது ஜெயந்தி மற்றும் 63-வது குருபூஜை விழா கிராம மக்கள் சார்பில் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
கிராமத் தலைவர் சங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், அப்பகுதி மக்கள் பசும்பொன் முத்துராமலிங்க தேவரைத் தங்களது குலதெய்வமாக ஏற்று தனியாகக் கோவில் அமைத்துச் சிறப்பு பூஜைகள் மற்றும் திருவிழாவாகக் கொண்டாடி வருகின்றனர். இந்த நிகழ்வில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொருளாளரும், கவிஞருமான திலகபாமா, மாவட்ட செயலாளர் செல்வம் தலைமையில் கலந்துகொண்டு தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
விழாவில் பங்கேற்ற பாமக மாநில பொருளாளர் திலகமாமவிற்கு கிராம மக்கள் சார்பில் சிறப்பான வரவேற்பும் மரியாதையும் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேவர் திருமகனாரின் வீரமும் விவேகமும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லப்பட வேண்டும் என்றும், தேசியம், தெய்வீகம், வீரம், விவேகம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து மக்கள் மற்றும் சமுதாய வளர்ச்சிப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும், இந்த உணர்வுப்பூர்வமான திருவிழாவில் பாமக சார்பில் கலந்துகொள்வதில் பெருமகிழ்ச்சி அடைவதாகவும் அவர் குறிப்பிட்டாள்.
இந்நிகழ்வில் நகரச் செயலாளர் காளீஸ்வரன், தேர்தல் பணிக்குழு தலைவர் சத்தீஸ்வரன் உள்ளிட்ட பல கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

