விக்ரமசிங்கபுரம் அருகேயுள்ள அனவன்குடியிருப்புப் பகுதியில் குடியிருப்புக்குள் புகுந்த சிறுத்தை ஒன்று, ஓய்வுபெற்ற அரசு பேருந்து ஓட்டுநர் சுப்பிரமணியம் என்பவரின் வீட்டுக் தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த ஆட்டைக் கொன்று இழுத்துச் சென்றது. இந்தச் சம்பவத்தால் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அப்பகுதியில் நடமாடும் சிறுத்தையைக் கூண்டு வைத்துப் பிடிக்க வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

