Settings

முகப்பு/நகரங்கள்/உயிருடன் இருக்கும் மூதாட்டி இறந்ததாகக் கூறி ரூ.20 லட்சத்திற்கு வீட்டை விற்றது எப்படி?
நகரங்கள்

உயிருடன் இருக்கும் மூதாட்டி இறந்ததாகக் கூறி ரூ.20 லட்சத்திற்கு வீட்டை விற்றது எப்படி?

🕒 3 நவ., 2026, 12:38 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
உயிருடன் இருக்கும் மூதாட்டி இறந்ததாகக் கூறி ரூ.20 லட்சத்திற்கு வீட்டை விற்றது எப்படி? - படம் 1
📸1 / 1
✨

AI Highlights

  • •நெல்லை அருகே போலி ஆவணங்களைத் தயாரித்து மூதாட்டியின் வீட்டை ரூ.20 லட்சத்திற்கு விற்ற விவகாரத்தில் 2 பெண்கள் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

நெல்லை மாவட்டம் கங்கைக்கொண்டான் அருகே போலி ஆவணங்களைத் தயாரித்து மூதாட்டியின் வீட்டை ரூ.20 லட்சத்திற்கு விற்பனை செய்த சம்பவம் தொடர்பாக இரண்டு பெண்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கங்கைக்கொண்டான் துறையூர் பகுதியைச் சேர்ந்தவர் மாரியம்மாள் (71). இவருடைய கணவர் ஆல்பர்ட் மற்றும் மகன் ஜோஸ்டின் ஆகியோர் இறந்துவிட்டனர். இந்நிலையில், மாரியம்மாள் மன அமைதிக்காக வெளியூர் சென்றிருந்த சமயத்தில், அவர் இறந்துவிட்டதாகத் தவறான தகவலைப் பரப்பி, போலி ஆவணங்களைத் தயாரித்து அவரது வீட்டை விமலா என்பவர் அஞ்சலாதேவி என்பவருக்கு ரூ.20 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாரியம்மாள், நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகாரளித்தார். புகாரின் அடிப்படையில், மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் விமலா மற்றும் அஞ்சலாதேவி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔