மதுரை வடக்கு வட்டத்தில் ரூ.3.10 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு, கூடுதல் முதல் தளத்துடன் கட்டப்பட்ட வணிகவரித்துறை பணியாளர் பயிற்சி நிறுவனக் கட்டடத்தை எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் இன்று (31.10.2026) திறந்து வைத்தார்.
வணிகவரித்துறை இணை ஆணையர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இத்திறப்பு விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா தலைமை வகித்தார். புதிய கட்டடத்தைத் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்த அமைச்சர், அங்குள்ள வசதிகளைப் பார்வையிட்டார்.
இந்நிகழ்வில் உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர்கள், துறை சார்ந்த உயர் அதிகாரிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

