மதுரை செல்லூர் மனோகரா நடுநிலைப் பள்ளி வளாகத்தில், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று (31.10.2026) நடைபெற்றது.
இணைந்த கைகள் மற்றும் குறிஞ்சி மலர் அரிமா சங்கம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த விழாவில், மதுரை வடக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் (எம்எல்ஏ) விஜய் அன்பன் கல்லாணை சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பொதுமக்களுக்கு தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் அரிமா சங்க நிர்வாகிகள், கல்வியாளர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

