Settings

முகப்பு/நகரங்கள்/திருப்பத்தூரில் புதிய டாஸ்மாக் கடை திறப்பு: பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்!
நகரங்கள்

திருப்பத்தூரில் புதிய டாஸ்மாக் கடை திறப்பு: பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்!

🕒 1 நவ., 2026, 12:37 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
திருப்பத்தூரில் புதிய டாஸ்மாக் கடை திறப்பு: பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்!

📸செய்தி புகைப்படங்கள் (Photo Gallery - 4 படங்கள்):

✨

AI Highlights

  • •திருப்பத்தூர் ஏரிக்கோடி பகுதியில் ஏற்கனவே மூன்று கடைகள் உள்ள நிலையில், புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட ஏரிக்கோடி பகுதியில் புதிய டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏரிக்கோடி பகுதியில் ஏற்கனவே மூன்று டாஸ்மாக் மதுபானக் கடைகள் பல ஆண்டுகளாக இயங்கி வரும் நிலையில், புதிதாக மேலும் ஒரு கடை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தி அடைந்து, புதிய கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பத்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் முரளி, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்பகுதியில் ஏற்கனவே மூன்று கடைகள் இயங்கி வரும் நிலையில், மேலும் ஒரு கடை திறப்பதை ஏற்க முடியாது என பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று புதிய கடையை உடனடியாக மூட வேண்டும் என திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திருப்பதி வலியுறுத்தினார். அதனைத் தொடர்ந்து புதிய கடை மூடப்பட்டது; வழக்கமான மூன்று கடைகள் மட்டும் திறக்கப்பட்டன. இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் சுமார் இரண்டு மணி நேரம் பரபரப்பு நிலவியது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔