Settings

முகப்பு/நகரங்கள்/நாகையில் அதிர்ச்சி: எலக்ட்ரீசியன் வீட்டில் சேமித்து வைத்த ரூ.4.88 லட்சத்தை அரித்த கரையான்கள்!
நகரங்கள்

நாகையில் அதிர்ச்சி: எலக்ட்ரீசியன் வீட்டில் சேமித்து வைத்த ரூ.4.88 லட்சத்தை அரித்த கரையான்கள்!

🕒 1 நவ., 2026, 04:19 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
நாகையில் அதிர்ச்சி: எலக்ட்ரீசியன் வீட்டில் சேமித்து வைத்த ரூ.4.88 லட்சத்தை அரித்த கரையான்கள்!

📸செய்தி புகைப்படங்கள் (Photo Gallery - 3 படங்கள்):

✨

AI Highlights

  • •நாகப்பட்டினத்தில் எலக்ட்ரீசியன் ஒருவர் வீட்டில் மர அலமாரியில் சேமித்து வைத்திருந்த ரூ.4,88,000 ரொக்கப் பணத்தை கரையான்கள் அரித்து சேதப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

நாகப்பட்டினத்தில் மர அலமாரியில் சேமித்து வைக்கப்பட்டிருந்த ரூ.4,88,000 ரொக்கப் பணத்தை கரையான்கள் அரித்து சேதப்படுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகை பப்ளிக் ஆபீஸ் சாலையைச் சேர்ந்தவர் செல்வமுருகன். எலக்ட்ரீசியனாகப் பணியாற்றி வரும் இவர், வெளியூர்களுக்குச் சென்று ஒப்பந்த அடிப்படையில் மின் வேலைகளைச் செய்து சம்பாதிக்கும் பணத்தை தனது வீட்டின் மர அலமாரியில் சேமித்து வந்துள்ளார். இந்நிலையில், மின் சாதனங்கள் வாங்குவதற்காகப் பணத்தை எடுப்பதற்காக அலமாரியைத் திறந்தபோது, அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.500, ரூ.200 மற்றும் ரூ.100 ரூபாய் நோட்டுகளை கரையான்கள் முற்றிலுமாக அரித்துச் சேதப்படுத்தியிருப்பதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.

இதனைத் தொடர்ந்து, சேதமடைந்த ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக நாகையில் உள்ள வங்கிகளை அவர் அணுகியுள்ளார். அப்போது, சென்னை ரிசர்வ் வங்கிக்குச் செல்லுமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அங்குச் சென்று விசாரித்தபோது, சீரியல் எண்கள் அழிக்கப்பட்ட அல்லது சேதமடைந்த நோட்டுகளை மாற்றுவதில் நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாகவும், முழுத் தொகையும் கிடைக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

தாய் மற்றும் தந்தையை இழந்து தனியாக வாழ்ந்து வரும் செல்வமுருகன், தான் உழைத்துச் சேர்த்த பணம் மொத்தமாக சேதமடைந்ததால் கடும் மனவேதனை அடைந்துள்ளார். மேலும், பொதுமக்கள் யாரும் வீட்டில் பணத்தைச் சேமிக்காமல் வங்கிகளில் பாதுகாப்பாகச் சேமிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். கரையான்களால் சேதமடைந்த தனது முழுப் பணத்தையும் மீட்டுத் தருவதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔