ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் முதலமைச்சர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிக்கான முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
பெருந்துறையில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அனைத்துப் பணிகளும் நாளை நிறைவடையும் என்றார். மேலும், முதலமைச்சர் எங்கு சென்றாலும் பொதுமக்களின் வரவேற்பு பெருமளவில் இருக்கும் என்றும், தெலுங்கானா சென்றபோதும் அங்கு பெரும் வரவேற்பு கிடைத்ததாகக் குறிப்பிட்ட அவர், இந்தியாவிலேயே பொதுமக்களால் அன்புடன் வரவேற்கப்படும் தலைவராக முதலமைச்சர் திகழ்வதாகத் தெரிவித்தார்.
முதலமைச்சரின் வருகை இடைத்தேர்தலுக்காக அல்ல என்றும், ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு பெண்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் 13 மாவட்டங்களை ஒருங்கிணைத்து இந்த நிகழ்வு நடத்தப்படுவதாகவும் அவர் விளக்கமளித்தார். இதனிடையே, தமிழர் ஒருவர் பிரதமராக வருவார் என இந்தியத் துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் எந்த அடிப்படையில் கூறினார் என்பது தனக்குத் தெரியாது என்றும், அதற்கு காலம்தான் பதிலளிக்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

