Settings

முகப்பு/நகரங்கள்/திண்டுக்கல்லில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம்: 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
நகரங்கள்

திண்டுக்கல்லில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம்: 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

🕒 1 நவ., 2026, 03:59 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
திண்டுக்கல்லில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம்: 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
✨

AI Highlights

  • •திண்டுக்கல்லில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பில் விஜயதசமி மற்றும் ஸ்தாபகர் தின விழா அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்டோர் சீருடையுடன் பங்கேற்றனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திண்டுக்கல்லில் ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) சார்பில் விஜயதசமி மற்றும் ஸ்தாபகர் தின விழாவை முன்னிட்டு அணிவகுப்பு ஊர்வலம் இன்று மாலை நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் அமைந்துள்ள ஐயப்பன் கோவில் அருகில் தொடங்கிய இந்த ஊர்வலத்தில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பிரத்யேக சீருடையான வெள்ளைச் சட்டை, காக்கி நிற முழுக்கால் சட்டை மற்றும் கருப்பு தொப்பி அணிந்து, கைகளில் பிரம்புகளுடன் ஊர்வலமாகச் சென்றனர்.

ஊர்வலத்தின் முன்னால் பேண்டு வாத்தியக் குழுவினர் இசை முழங்க அணிவகுத்துச் சென்றனர். வழிநெடுகிலும் திரண்டிருந்த பொதுமக்கள் மலர் தூவி வரவேற்பு அளித்தனர். நிகழ்வின் பாதுகாப்பிற்காக திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔