Settings

முகப்பு/நகரங்கள்/திருப்பத்தூரில் TNPSC தேர்வு எழுதியவர்கள் எத்தனை பேர்? 1,123 பேர் ஆப்சென்ட்!
நகரங்கள்

திருப்பத்தூரில் TNPSC தேர்வு எழுதியவர்கள் எத்தனை பேர்? 1,123 பேர் ஆப்சென்ட்!

🕒 1 நவ., 2026, 08:06 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
திருப்பத்தூரில் TNPSC தேர்வு எழுதியவர்கள் எத்தனை பேர்? 1,123 பேர் ஆப்சென்ட்!

📸செய்தி புகைப்படங்கள் (Photo Gallery - 3 படங்கள்):

✨

AI Highlights

  • •தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் திருப்பத்தூர் மாவட்டத்தில் 5,164 பேர் பங்கேற்றனர். 1,123 பேர் தேர்வு எழுத வரவில்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு திருப்பத்தூர் மாவட்டத்தில் அமைதியான முறையில் நடைபெற்றது.

மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூரில் 15 மையங்கள் மற்றும் வாணியம்பாடி வட்டத்தில் 6 மையங்கள் என மொத்தம் 21 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இத்தேர்வில் கலந்துகொள்ள மொத்தம் 6,287 தேர்வாளர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். கிராமப்புற மற்றும் நகர்ப்புற தேர்வாளர்கள் மையங்களுக்கு எளிதில் சென்றுவரும் வகையில் திருப்பத்தூர், நாட்டறம்பள்ளி, ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களிலிருந்து காலை 6 மணிமுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

தேர்வு முறைகேடுகளைத் தவிர்க்கும் பொருட்டு, துணை ஆட்சியர் நிலையில் இரண்டு கண்காணிப்புக் குழுக்களும், மூன்று பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டு தீவிரக் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தேர்வாளர்கள் கருப்பு நிற பந்துமுனைப் பேனாக்களைப் பயன்படுத்த மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்; எந்தவித மின்னணு சாதனங்களுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.

மாவட்ட ஆட்சியர் நல்லசிவன், வாணியம்பாடி இஸ்லாமிய ஆண்கள் கல்லூரி மற்றும் ஹோலி கிராஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி ஆகிய தேர்வு மையங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இத்தேர்வில் திருப்பத்தூர் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட 6,287 பேரில், 1,123 பேர் வருகை புரியவில்லை. இதனையடுத்து, மொத்தம் 5,164 தேர்வாளர்கள் மட்டுமே தேர்வு எழுதியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔