Settings

முகப்பு/நகரங்கள்/வால்பாறை அரசுப் பள்ளி 100% தேர்ச்சி: ஆசிரியர்களுக்கு அரிமா சங்கம் பாராட்டு!
நகரங்கள்

வால்பாறை அரசுப் பள்ளி 100% தேர்ச்சி: ஆசிரியர்களுக்கு அரிமா சங்கம் பாராட்டு!

🕒 2 நவ., 2026, 04:05 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
வால்பாறை அரசுப் பள்ளி 100% தேர்ச்சி: ஆசிரியர்களுக்கு அரிமா சங்கம் பாராட்டு! - படம் 1
📸1 / 2
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (2)படத்தைத் தொடவும்
✨

AI Highlights

  • •கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை அரசு மேல்நிலைப் பள்ளி பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றதை முன்னிட்டு, ஆசிரியர்களுக்கு அரிமா சங்கம் சார்பில் நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறை அரசு மேல்நிலைப் பள்ளி பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றதை முன்னிட்டு, ஆசிரியர்களைப் பாராட்டி நினைவுப் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையைச் சேர்ந்த மல்லிகை அரிமா சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு, சங்கத்தின் தலைவர் டாக்டர் பி. செந்தில்குமார் தலைமை தாங்கினார். வால்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் சிவன்ராஜ் மற்றும் ஆசிரியர்களுக்குச் சால்வை அணிவிக்கப்பட்டு, நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இவ்விழாவில் முன்னாள் இந்திய ஏலக்காய் ஆராய்ச்சி மைய இயக்குநரும் அரிமா சங்க செயலாளருமான டாக்டர் தனபால், முன்னாள் பெரியகுளம் வட்டார வளர்ச்சி அலுவலரும் அரிமா சங்க துணைத் தலைவருமான க. சேகரன், அரிமா சங்க பொருளாளர் மற்றும் ஆசிரியர் சுரேஷ் ஜோசப் சுந்தர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். விழாவில் பேசிய டாக்டர் தனபால், கல்வியின் முக்கியத்துவம் மற்றும் அவசியம் குறித்து மாணவர்களிடம் விரிவாக எடுத்துரைத்தார்.

நிகழ்ச்சியின் நிறைவாக, பள்ளியின் முன்னாள் மாணவரும் அரிமா சங்க துணைத் தலைவருமான க. சேகரன் நன்றி கூறினார். மல்லிகை அரிமா சங்கம் சார்பில் 100 சதவீத தேர்ச்சி பெறும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்குப் பாராட்டு கேடயங்கள் வழங்குவதோடு, கிராமப்புற மாணவர்களுக்கும் நலிந்த மக்களுக்கும் நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔