செய்திகள்
காலி மதுபாட்டில் சேகரிப்பு திட்டத்தை அமல்படுத்த எதிர்ப்பு: டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
🕒 1 நவ., 2026, 07:24 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
காலி மதுபாட்டில் சேகரிப்பு திட்டத்தை அமல்படுத்த எதிர்ப்பு: டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
காலி மதுபாட்டில் சேகரிப்பு திட்டத்தை அமல்படுத்துவதற்கு போதிய கால அவகாசம் வழங்கக் கோரி, விருதுநகரில் டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் முன்பு டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
டாஸ்மாக் நிர்வாகம் காலி மதுபாட்டில் சேகரிப்பு திட்டத்தை அவுட்சோர்சிங் முறையில் செயல்படுத்தாமல், இத்திட்டம் தொடர்பான தயாரிப்புப் பணிகளுக்கும் போதிய கால அவகாசம் வழங்காமல், நவம்பர் 1-ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் பைபேக் (Buyback) திட்டத்தை நடைமுறைப்படுத்த முனைப்பு காட்டி வருவதாக தொழிற்சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதற்கு ஆட்சேபனை தெரிவிக்கும் வகையிலும், திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு போதிய கால அவகாசம் வழங்க வலியுறுத்தியும் விருதுநகர் மாவட்ட டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்டம் முழுவதும் உள்ள ஏராளமான டாஸ்மாக் பணியாளர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது, கோரிக்கைகளை வலியுறுத்தியும், த.வெ.க. அரசைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.
