செய்திகள்
மணிமுத்தாறு அணையில் இருந்து பிசான பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு!
🕒 1 நவ., 2026, 11:00 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

📸செய்தி புகைப்படங்கள் (Photo Gallery - 2 படங்கள்):
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டத்தில் உள்ள மணிமுத்தாறு அணை நீர்த்தேக்கத்திலிருந்து பிசான பருவ சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, இன்று (01.11.2026) நடைபெற்ற நிகழ்ச்சியில் சேரன்மகாதேவி சார் ஆட்சியர் ஆயுஸ் குப்தா , முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா மற்றும் விவசாயிகள் முன்னிலையில் தண்ணீர் திறந்து வைக்கப்பட்டது.
செய்தியின் முக்கிய அம்சங்கள்:
பாசன காலம்: அணைக்கு வரும் மழைப் பொழிவு, நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தைப் பொறுத்து 01.11.2026 முதல் 31.03.2027 வரை மொத்தம் 151 நாட்களுக்குச் சுழற்சி முறையில் தேவைக்கேற்ப தண்ணீர் திறந்து விடப்படும்.
பயனடையும் பகுதிகள்: இதன் மூலம் அம்பாசமுத்திரம் வட்டத்தில் உள்ள ஜமீன் சிங்கம்பட்டி, அயன் சிங்கம்பட்டி, வைராவிகுளம், தெற்கு பாப்பான்குளம், தெற்கு கல்லிடைக்குறிச்சி மற்றும் கீழ்முகம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 2,756.62 ஏக்கர் பாசனப்பரப்பு பயனடையும்.
வேண்டுகோள்: அணைகளில் போதிய நீர் இருப்பு மற்றும் வரத்து குறையும் பட்சத்தில், முன்னுரிமை அடிப்படையில் குடிநீர் மற்றும் இதர தேவைகளுக்கு மட்டுமே தண்ணீர் வழங்க இயலும். எனவே, விவசாயிகள் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி நீர்வளத்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்நிகழ்ச்சியில் செயற்பொறியாளர். தனலெட்சுமி, உதவி செயற்பொறியாளர் முருகன், உதவி பொறியாளர்கள் விஜயபாரதி,ராமராஜ், அரசு அலுவலர்கள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

