செய்திகள்
அரியலூர்-மீன்சுருட்டியில் மூதாட்டியிடம் நகை திருடியவர் கைது .24 மணி நேரத்தில் குற்றவாளியைப் பாண்டிச்சேரியில் கண்டு பிடித்த காவல் துறையினருக்கு குவியும் பாராட்டுக்கள்.
🕒 1 நவ., 2026, 10:49 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
அரியலூர்-மீன்சுருட்டியில் மூதாட்டியிடம் நகை திருடியவர் கைது .24 மணி நேரத்தில் குற்றவாளியைப் பாண்டிச்சேரியில் கண்டு பிடித்த காவல் துறையினருக்கு குவியும் பாராட்டுக்கள்.
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் பூங்கோதை (மூதாட்டி). இவர் அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்று வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில் மீன்சுருட்டி கடை வீதியில் காவல் நிலையம் அருகே மாலை 4 மணி அளவில் நடந்து சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த வாலிபர் ஒருவர், அந்த மூதாட்டி மீது மோதுவது போல் சென்று, அவர் அணிந்திருந்த மூன்றரை பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றுவிட்டார்.
இதுகுறித்து மீன்சுருட்டி காவல் நிலையப் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையின் அடிப்படையில், திருபுவனத்தைச் சேர்ந்த இஜாஸ் அகமது என்பவரைக் பாண்டிச்சேரியில் வைத்து கைது செய்து, அவரிடமிருந்து நகையைப் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர் மீது பல்வேறு குற்றவழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடதக்கது.
