செய்திகள்
திருநெல்வேலி மாநகராட்சியில் சமூக நாய்களுக்கு வெறிநோய் (ரேபிஸ்) தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
🕒 1 நவ., 2026, 10:55 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
நெல்லை
மாநகராட்சிக்கு உட்பட்ட 4 மண்டலங்களிலும் உள்ள தெரு நாய்களுக்கு வாரந்தோறும் இந்த ரேபிஸ் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் அக்டோபர் நடைபெற்ற சிறப்பு முகாமில், மாநகராட்சி சுகாதாரப் பிரிவு மற்றும் கால்நடை பராமரிப்புத் துறையினர் இணைந்து தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
மண்டலம் வாரியாக தடுப்பூசி செலுத்தப்பட்ட நாய்களின் விவரம் மேலப்பாளையம் மண்டலம்: வார்டு 48 பகுதிகளில் சுற்றித்திரிந்த 24 சமூக நாய்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
பாளைங்கோட்டை மண்டலம்: வார்டு 55 ராஜகோபாலபுரம் பகுதியில் 26 நாய்களுக்குத் தடுப்பூசி போப்பட்டது.
திருநெல்வேலி மண்டலம்: வார்டு 19, 21, 22 ஆகிய பகுதிகளுக்கு உட்பட்ட சேரன்மகாதேவி மெயின் ரோடு, ரகுமான்பேட்டை, வீரபாகு நகர் மற்றும் செக்கடி பகுதிகளில் 16 நாய்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
தச்சநல்லூர் மண்டலம்: வார்டு 4 மற்றும் 10-க்கு உட்பட்ட பெரியபாளையம், நெடுமாறன் நாயனார் தெரு பகுதிகளில் 22 நாய்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டது.
ஒரே நாளில் நடத்தப்பட்ட இந்தச் சிறப்பு முகாம் மூலம் 4 மண்டலங்களிலும் சேர்த்து மொத்தம் 88 சமூக நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
