சுத்தமல்லி காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட ஒன்றரை கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த வழக்கில், இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தளவாய்புரத்தைச் சேர்ந்த வீரமணி (20) மற்றும் தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான செல்வகுமார் (19) ஆகிய இருவரும் மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய 1.5 கிலோகிராம் எடையுள்ள கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாகக் தகவலறிந்த சுத்தமல்லி காவல்துறையினர், விரைந்து செயல்பட்டு சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த இருவரையும் சுற்றிவளைத்துக் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து தடை செய்யப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதுடன், இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

