Settings

முகப்பு/செய்திகள்/நீதிமன்ற வளாகத்தில் புகுந்த விஷப் பாம்பு: தீயணைப்புத் துறையினர் மீட்பு
செய்திகள்

நீதிமன்ற வளாகத்தில் புகுந்த விஷப் பாம்பு: தீயணைப்புத் துறையினர் மீட்பு

🕒 2 நவ., 2026, 02:27 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
நீதிமன்ற வளாகத்தில் புகுந்த விஷப் பாம்பு: தீயணைப்புத் துறையினர் மீட்பு - படம் 1
📸1 / 1
✨

AI Highlights

  • •திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உரிமையியல் நீதிமன்ற வளாகத்தில் புகுந்த விஷப் பாம்பை தீயணைப்புத் துறையினர் லாவகமாகப் பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி கச்சேரி சாலையில் செயல்பட்டு வரும் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற வளாகத்தில் வழக்கம்போல் நீதிமன்ற பணிகள் தொடங்கி, நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்றப் பணியாளர்கள் மற்றும் வழக்கு விசாரணைக்காக வந்த பொதுமக்கள் எனப் பலர் வளாகத்தில் கூடியிருந்தனர். அப்போது, நீதிமன்ற வளாகத்தின் ஒரு பகுதியில் சு விஷப் பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதைக் கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டனர். பாம்பு நடமாட்டத்தைக் கண்ட பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்கள் அச்சத்தில் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. இதுகுறித்து நீதிமன்ற ஊழியர்கள் உடனடியாக வாணியம்பாடி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த நிலைய அலுவலர் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். நீதிமன்ற வளாகத்தின் மறைவான பகுதியில் பதுங்கியிருந்த அந்தப் பாம்பை, தீயணைப்பு வீரர்கள் தங்களது உபகரணங்களைப் பயன்படுத்தி லாவகமாகப் பிடித்தனர். பிடிபட்ட பாம்பு ஒரு விஷத்தன்மை கொண்ட நல்ல பாம்பு என்பது தெரியவந்தது. பின்னர் அந்தப் பாம்பை ஒரு சாக்குப்பையில் பத்திரமாக அடைத்த தீயணைப்புத் துறையினர், அதனை அடர்ந்த வனப்பகுதிக்கு எடுத்துச் சென்று பத்திரமாக விடுவித்தனர். தீயணைப்புத் துறையினரின் இந்தத் துரிதமான நடவடிக்கையால் எவ்வித அசம்பாவிதமும் நிகழாமல் தவிர்க்கப்பட்டது. இதையடுத்து நீதிமன்றப் பணிகள் மீண்டும் வழக்கம் போல் அமைதியாகத் தொடர்ந்தன. உடனடியாகச் செயல்பட்டு பாம்பைப் பிடித்த தீயணைப்பு வீரர்களை வழக்கறிஞர்களும் பொதுமக்களும் பாராட்டினர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔