வேலூர் மாவட்டம் 31-10-26 காட்பாடி ரயில் நிலையத்தில் 45 கிலோ தடை செய்யப்பட்ட ஹான்ஸ் (குட்கா) பறிமுதல். இன்று மாலை காட்பாடி ரயில் நிலைய நடைமேடை எண் 3 ல் நின்றிருந்த நிஜாமுதீன் – திருவனந்தபுரம் விரைவு ரயிலில் காட்பாடி ரயில்வே காவல் ஆய்வாளர் சித்ரா அவர்கள் தலைமையில் போலீசார் சோதனை மேற் கொண்டனர். அப்போது ரயிலின் பின்புற பொதுப் பெட்டியில் கேட்பாரற்றுக் கிடந்த 3 கட்டைப் பைகள் மற்றும் ஒரு தோள்பையில் இருந்த தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 45 கிலோ ஹான்ஸ் (குட்கா) பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் மேல் நடவடிக்கைக்காக காட்பாடி ரயில்வே காவல் நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டன. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகள்
காட்பாடி ரயில் நிலையத்தில் 45 கிலோ தடை செய்யப்பட்ட ஹான்ஸ் (குட்கா) பறிமுதல்.
🕒 31 அக்., 2026, 02:11 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

✨
AI Highlights
- •காட்பாடி ரயில் நிலையத்தில் 45 கிலோ தடை செய்யப்பட்ட ஹான்ஸ் (குட்கா) பறிமுதல்.
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
