Settings

முகப்பு/செய்திகள்/*கடவுள் கொடுத்த வரம் மழைஒரு சொட்டு நீரும் வீணாகக் கூடாது!ராஜபாளையம் 6-வது மைல் நீர்தேக்கத்தில் அமைச்சர் ஜெகதீஸ்வரி ஆய்வு!*
செய்திகள்

*கடவுள் கொடுத்த வரம் மழைஒரு சொட்டு நீரும் வீணாகக் கூடாது!ராஜபாளையம் 6-வது மைல் நீர்தேக்கத்தில் அமைச்சர் ஜெகதீஸ்வரி ஆய்வு!*

🕒 1 நவ., 2026, 11:29 AM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு
*கடவுள் கொடுத்த வரம் மழைஒரு சொட்டு நீரும் வீணாகக் கூடாது!ராஜபாளையம் 6-வது மைல் நீர்தேக்கத்தில் அமைச்சர் ஜெகதீஸ்வரி  ஆய்வு!*
✨

AI Highlights

  • •*கடவுள் கொடுத்த வரம் மழைஒரு சொட்டு நீரும் வீணாகக் கூடாது!ராஜபாளையம் 6-வது மைல் நீர்தேக்கத்தில் அமைச்சர் ஜெகதீஸ்வரி ஆய்வு!*

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

*கடவுள் கொடுத்த வரம் மழைஒரு சொட்டு நீரும் வீணாகக் கூடாது!ராஜபாளையம் 6-வது மைல் நீர்தேக்கத்தில் அமைச்சர் ஜெகதீஸ்வரி ஆய்வு!* விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகரின் முக்கியக் குடிநீர் ஆதாரமாக விளங்கும் 6-வது மைல் நீர்த்தேக்கம் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி நேரில் சென்று விரிவான கள ஆய்வு மேற்கொண்டார். ​ஆய்வின் போது நீர் தேக்கத்தின் மொத்தக் கொள்ளளவான 24 அடியில் மழைக் காலங்களில் எத்தனை அடி வரை நீர் தேக்கி வைக்கப்படுகிறது எனப் பொதுப்பணித்துறை மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் அமைச்சர் கேட்டறிந்தார். அதற்குப் பதிலளித்த அதிகாரிகள் 16 அடி வரை மட்டுமே தண்ணீர் தேக்கப்படு வதாகவும் அதற்கு மேல் நீரின் அளவு உயர்ந்தால் நீர் தேத்தக்கின் நிலைத்தன்மைக்குச் சவால் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தனர். ​இதைக் கேட்டு அதிருப்தி அடைந்த அமைச்சர் மழை என்பது கடவுள் நமக்குக் கொடுத்த வரம் அதை எப்பாடுபட்டாவது வீணாகாமல் முழுமையாகத் தேக்கி வைக்க வேண்டும். ராஜபாளையம் பொதுமக்களுக்கு எந்தக் காரணத்தைக் கொண்டும் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அணையில் முழு கொள்ளளவு நீரையும் பாதுகாப்பாகத் தேக்குவதற்குத் தேவையான பலப்படுத்தும் பணிகள் மற்றும் திட்ட முன்மொழிவுகளை உடனடியாகத் தயார் செய்து என்னிடம் கொடுங்கள் நான் இதனை மாண்புமிகு முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு சென்று தேவையான முழு நிதி மற்றும் உதவிகளை உடனடியாகப் பெற்றுத் தருகிறேன் என அதிகாரிகளுக்குத் திட்டவட்டமாக உத்தரவிட்டார். ​இதனைத் தொடர்ந்து நீர்தேக்கத்தில் இருந்து பொதுமக்களுக்குக் குடிநீர் விநியோகிக்கும் சுத்திகரிப்பு நிலையத்திற்குச் சென்ற அமைச்சர், அங்கு புதிதாகக் கட்டப்பட்டு வரும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்டுத் தரத்தை ஆய்வு செய்தார். மேலும் தற்போது பயன்பாட்டில் உள்ள பழைய சுத்திகரிப்பு நிலையத்தைப் பார்வையிட்டு, அதன் தரம் மற்றும் தூய்மை குறித்து அதிகாரிகளிடம் தீவிர விசாரணை நடத்தினார். ​மேலும், கோடை மற்றும் வறட்சிக் காலங்களில் ராஜபாளையம் மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் நன்னீர்க் கிணறுகள் குறித்து ஆய்வு செய்த அமைச்சர் அவை எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு தூர்வாரப்பட்டன எனக் கேட்டறிந்தார். நிலத்தடி நீர் ஆதாரத்தைப் பெருக்கும் வகையில், அனைத்து நன்னீர்க் கிணறுகளையும் உடனடியாகப் படிப்படியாகத் தூர்வாரும் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு ஆய்வை நிறைவு செய்தார் ​

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔