Settings

முகப்பு/செய்திகள்/திருவாரூரில் மாடுகளுக்கு தீவிர அம்மை நோய் தடுப்பூசி செலுத்தும் பணி!
செய்திகள்

திருவாரூரில் மாடுகளுக்கு தீவிர அம்மை நோய் தடுப்பூசி செலுத்தும் பணி!

🕒 1 நவ., 2026, 10:30 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
திருவாரூரில் மாடுகளுக்கு தீவிர அம்மை நோய் தடுப்பூசி செலுத்தும் பணி!
✨

AI Highlights

  • •விக்கிரபாண்டியம் பகுதியில் வீடு வீடாக சென்று மாடுகளுக்கு அம்மை நோய் தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருவாரூர் மாவட்டம் முழுவதும் கால்நடைகளுக்கு அம்மை நோய் பரவுவதைத் தடுக்கும் வகையில், மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, மன்னார்குடி வட்டாரத்திற்குட்பட்ட விக்கிரபாண்டியம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வீடு வீடாகச் சென்று மாடுகளுக்கு அம்மை நோய் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

மன்னார்குடி அருகே உள்ள விக்கிரபாண்டியம் கால்நடை உதவி மருத்துவர் சந்துரு தலைமையில், ஆலத்தூர், இருள்நீக்கி, சபாபதிபுரம், புழுதிகுடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இத்தடுப்பூசி முகாம் முடுக்கிவிடப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் மாடுகளுக்கு அம்மை நோய் பரவ வாய்ப்புள்ளதால், கால்நடை உரிமையாளர்களின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று இத்தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இதுவரை அப்பகுதியில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட மாடுகளுக்கு அம்மை நோய் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக உதவி மருத்துவர் சந்துரு தெரிவித்துள்ளார். கால்நடைத் துறையின் இந்தச் சேவையானது மாட்டு உரிமையாளர்கள் மத்தியில் வரவேற்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔