செய்திகள்
திருப்பத்தூர் மாவட்டம் *திருப்பத்தூரில் முதியவரை தீண்டிய பாம்பு!அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக பாம்பை அடித்து கொன்று பொட்டலமாகக் கொண்டு வந்த முதியவரால் பரபரப்பு*
🕒 1 நவ., 2026, 03:11 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
திருப்பத்தூர் மாவட்டம்.
திருப்பத்தூர் அடுத்த பொம்மிக்குப்பம் அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பூபாலன் (60) இவர், திருப்பத்தூர் அடுத்த மொளகாரம்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் முதியவர் பூபாலன் சாப்பிட்டுவிட்டு கட்டிலில் அமர்ந்திருந்தபோது திடீரென அவரது காலில் கட்டுவிரியன் பாம்பு தீண்டியதாக சொல்லப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் தன்னை தீண்டிய பாம்பை அடித்து கொன்று அதை ஒரு பிளாஸ்டிக் கவரில் பாதுகாப்பாக பொட்டலமாகக் கட்டிக்கொண்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார்,
அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதற்கிடையில் அவரை தீண்டிய பாம்பையும் பொட்டலமாக கொண்டு முதியவர் அரசு மருத்துவமனைக்கு வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
