செய்திகள்
அரியலூர் -செந்துறை அருகே சிறுகளத்தூர் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அரியலூர் -செந்துறை அருகே சிறுகளத்தூர் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
🕒 1 நவ., 2026, 11:34 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

📸1 / 2
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (2)படத்தைத் தொடவும்
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
அரியலூர் -செந்துறை அருகே சிறுகளத்தூர் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சிறுகளத்தூர் கிராமத்தில் அம்பேத்கர் நகர் பல நூற்றாண்டுகளுக்கு மேல் பழமையான அருள்மிகு ஸ்ரீ விநாயகர், அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன்,அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலயம் உள்ளது.
இந்த ஆலயத்தின் புனரமைப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
இதனையொட்டி நேற்று முன்தினம் கோவிலில் யாகசாலை அமைக்கப்பட்ட விக்னேஸ்வர பூஜை, முதலாம் கால யாகசாலை பூஜை, இரண்டாம் கால மற்றும் மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டது.
இன்று காலை நான்காம் கால யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு நடைபெற்றது.
இதனைதொடர்ந்து புனித நீர் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கோவில் கோபுரத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
தொடர்ந்து உற்சவர் மற்றும் சுவாமிகளுக்கு ஊற்றப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நீர் பொதுமக்கள் மீது தெளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்றுவட்டப் பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு முத்துமாரியம்மனை வழிபட்டனர். இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
.
