Settings

முகப்பு/செய்திகள்/மயிலாடுதுறை மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளில் புதிய நடைமுறையின்படி பாட்டில்களை 3 முறை ஸ்கேன் செய்து மதுபாட்டில்கள் வழங்க சர்வர் பிரச்சனை மற்றும் காலதாமதம், நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டதால் 42 மதுபான கடைகள் மூடல். மயிலாடுதுறை நகரில் தனியார் எலைட் மதுபானக் கூடத்தில் குவிந்த குடிமகன்களால் தள்ளுமுள்ளு; கடும் போக்குவரத்து நெரிசல்:-
செய்திகள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளில் புதிய நடைமுறையின்படி பாட்டில்களை 3 முறை ஸ்கேன் செய்து மதுபாட்டில்கள் வழங்க சர்வர் பிரச்சனை மற்றும் காலதாமதம், நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டதால் 42 மதுபான கடைகள் மூடல். மயிலாடுதுறை நகரில் தனியார் எலைட் மதுபானக் கூடத்தில் குவிந்த குடிமகன்களால் தள்ளுமுள்ளு; கடும் போக்குவரத்து நெரிசல்:-

🕒 1 நவ., 2026, 04:50 PM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு
✨

AI Highlights

  • •மயிலாடுதுறை மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளில் புதிய நடைமுறையின்படி பாட்டில்களை 3 முறை ஸ்கேன் செய்து மதுபாட்டில்கள் வழங்க சர்வர் பிரச்சனை மற்றும் காலதாமதம், நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டதால் 42 மதுபான கடைகள் மூடல். மயிலாடுதுறை நகரில் தனியார் எலைட் மதுபானக் கூடத்தில் குவிந்த குடிமகன்களால் தள்ளுமுள்ளு; கடும் போக்குவரத்து நெரிசல்:-

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

தமிழகத்தில் இன்றுமுதல் டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்கள் திரும்ப வழங்கும் புதிய திட்டம் அமலுக்கு வந்ததால் புதிய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு மாவட்டங்களில் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிய திட்டத்தின்படி விற்பனையின்போது பாட்டிலில் உள்ள கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்ய வேண்டும், பிஓஎஸ் இயந்திரத்தில் தொகையைச் சரிபார்க்க மீண்டும் ஒருமுறை ஸ்கேன் செய்ய வேண்டும, காலி பாட்டிலை திரும்பப்பெறும்போது வாடிக்கையாளர் காலி பாட்டிலை ஒப்படைத்துவிட்டு 10 ரூபாய் ரீஃபண்ட் தொகையைப் பெறும்போது, அந்தப் பாட்டிலை உறுதிப்படுத்த ஊழியர்கள் மீண்டும் ஸ்கேன் செய்ய என மூன்று முறை ஸ்கேன் செய்து கொடுப்பதில் சர்வர் பிரச்சனை ஏற்பட்டதால் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 42 டாஸ்மாக் மதுபான கடைகளும் முன்னறிவிப்பு இன்றி ஊழியர்கள் கடையை மூடினர். நுகர்வோர்கள் மது வாங்கக் கூட்டமாக வரும் நேரங்களில், ஒவ்வொரு பாட்டிலையும் மூன்று முறை ஸ்கேன் செய்வதால் கணினியில் சர்வர் குறைபாடு மற்றும் கடுமையான காலதாமதம் ஏற்படுகிறது. 1000 ரூபாய்க்கு மேல் மது வாங்குபவர்கள் கண்டிப்பாக UPI அல்லது கார்டு மூலமாக மட்டுமே பணம் செலுத்த வேண்டும் என்ற புதிய விதியும் அமல்படுத்தப்பட்டுள்ளதால் மதுபாட்டில்கள் விற்பனை செய்ய காலதாமதம் ஏற்பட்ட காரணத்தால் டாஸ்மாக் ஊழியர்கள் தன்னிச்சையாக கடையை மூடினர். இதனால் மது பிரியர்கள் மதுபானங்கள் வாங்க முடியாமல் கடும் அவதி அடைந்தனர். இந்நிலையில் மயிலாடுதுறை நகரில் உள்ள தனியார் மணமகிழ் மன்றம் எலைட் பார் மட்டும் திறந்திருந்ததால் மது பிரியர்கள் அங்கு குவிந்தனர். நீண்ட வரிசையில் நின்று மதுபானங்கள் வாங்கிய நிலையில் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஊழியர்கள் மது பிரியர்களை வைத்து கடையின் கதவை மூடிய நிலையில் மதுபானங்கள் வாங்கிக் கொண்டு கதவை திறந்து கொண்டு வெளியே மதுபிரியர்கள் வெளியே வந்த நிலையில், வெளியில் காத்திருந்த குடிமகன்கள் போட்டி போட்டுக் கொண்டு கடையில் உள்ளே புகுந்ததால் வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அந்த கடையும் பூட்டப்பட்டது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔