Settings

முகப்பு/செய்திகள்/நாமக்கல்லில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி. 150 க்கும் மேற்ப்பட்ட வீரர்கள் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினர்.
செய்திகள்

நாமக்கல்லில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி. 150 க்கும் மேற்ப்பட்ட வீரர்கள் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினர்.

🕒 1 நவ., 2026, 04:01 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
நாமக்கல்லில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி.
150 க்கும் மேற்ப்பட்ட வீரர்கள் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினர்.
✨

AI Highlights

  • •நாமக்கல்லில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி.
  • •150 க்கும் மேற்ப்பட்ட வீரர்கள் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

நாமக்கல்லில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி. 150 க்கும் மேற்ப்பட்ட வீரர்கள் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினர். நாமக்கல்லில் மாவட்ட ஆணழகன் சங்கம் சார்பில் மாவ்ளஸ் கிளாசிக் 2026 ஆணழகன் போட்டி நடைபெற்றது. இப் போட்டியை நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் திலீப் குத்துவிளக்கேட்டில் தொடங்கி வைத்தார். 50 வயது முதல் 80 வயது மற்றும் ஓபன் பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெற்றன. 15 வகையான மாறுபட்ட கோணங்களில் நடத்தப்பட்ட போட்டியில் நாமக்கல் சேந்தமங்கலம் மோகனூர் ராசிபுரம் திருச்செங்கோடுபரமத்தி வேலூர்உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 150-க்கும் மேற்பட்ட ஆணழகன்கள் கலந்து கொண்டனர். கட்டுமஸ்தான தனது உடலை வளைத்து நிலைத்து தனது திறமையை வெளிப்படுத்தினர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் திலீப் பரிசுகளை வழங்கி பாராட்டினார். அப்போது கல்வி மட்டுமின்றி விளையாட்டு துறையிலையும் முன்னுரிமை கொடுத்து பயிற்சி மேற்கொண்டால் அதிக அளவில் வேலைவாய்ப்பு கிடைக்கும் என வீரர்களை ஊக்கப்படுத்தி பேசினார். போட்டியில் நாமக்கல் மிச்சர் ஜிம் உரிமையாளர் செல்வம். நாமக்கல் மாவட்ட ஆணழகன் அசோசியேஷன் சங்க தலைவர் தனலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔