Settings

முகப்பு/செய்திகள்/திருப்பத்தூர் மாவட்டத்தில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் இணையவழி குற்றங்கள் குறித்து ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படை சார்பில் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
செய்திகள்

திருப்பத்தூர் மாவட்டத்தில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் இணையவழி குற்றங்கள் குறித்து ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படை சார்பில் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

🕒 1 நவ., 2026, 02:02 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
திருப்பத்தூர் மாவட்டத்தில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் இணையவழி குற்றங்கள் குறித்து ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படை சார்பில் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. - படம் 1
📸1 / 4
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (4)படத்தைத் தொடவும்

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .அக்க்ஷய் அனில் வாகரே, அவர்களின் உத்தரவின்பேரில், பொதுமக்களிடையே பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் காவல்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, காவல்துறையின் ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படை சார்பில் நேற்று (01.11.2026) ஆலங்காயம் காமராஜ் நகர், ஆலங்காயம் பஸ் நிலையம், மேல்நிம்மியம்பட்டு கிராமம் மற்றும் கொத்தக்கோட்டை ஆகிய பகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் சிங்கப்பெண் அதிரடிப்படை காவல்துறையினர் கலந்துகொண்டு பொதுமக்கள் மற்றும் பெண்களிடையே பேசியதாவது:- பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை முற்றிலும் தடுக்க காவல்துறை எப்போதும் துணை நிற்கிறது. அவசர காலங்களில் பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் காவல்துறையை உடனடியாகத் தொடர்பு கொள்ள ‘112’ மற்றும் பெண்கள் உதவிக்கான இலவச தொலைபேசி எண் ‘181’ ஆகியவற்றைத் தயங்காமல் பயன்படுத்த வேண்டும். அதேபோல், தற்போது செல்போன் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் நடக்கும் இணையவழி நிதி மோசடிகள், போலியான லிங்க்குகள், அடையாளம் தெரியாத நபர்களின் வீடியோ அழைப்புகள் மற்றும் தனிநபர் விவரங்களை திருடும் ஆன்லைன் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இத்தகைய சைபர் குற்றங்கள் குறித்து பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இணையவழி மோசடிக்கு ஆளானால் உடனடியாக ‘1930’ என்ற உதவி எண்ணையோ அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தையோ தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் சிங்கப்பெண் அதிரடிப்படை காவலர்கள், பொதுமக்கள், மகளிர் சுயஉதவிக் குழுவினர் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட பலர் திரளாகக் கலந்துகொண்டனர். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔