செய்திகள்
அகரம் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் – ஆட்சியர் நல்லசிவன், எம்.எல்.ஏ. திருப்பதி பங்கேற்பு!
🕒 1 நவ., 2026, 01:58 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

📸1 / 1
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
திருப்பத்தூர்: உள்ளாட்சி தினத்தையொட்டி, திருப்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட அகரம் ஊராட்சியில் இன்று (நவம்பர் 1) கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் நல்லசிவன் மற்றும் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திருப்பதி ஆகியோர் கலந்து கொண்டு, பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தனர். மேலும், பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பான மனுக்களைப் பெற்றுக் கொண்டனர்.
இதில் அனைத்துத் துறை அரசு அதிகாரிகள், ஊராட்சி நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
