Settings

முகப்பு/செய்திகள்/ராஜபாளையம் ரயில் நிலையம் அருகே போட்டோ ஸ்டுடியோவில் ஏற்பட்ட தீயில் லட்சக்கணக்கான பொருட்கள் எரிந்து சேதமானது.
செய்திகள்

ராஜபாளையம் ரயில் நிலையம் அருகே போட்டோ ஸ்டுடியோவில் ஏற்பட்ட தீயில் லட்சக்கணக்கான பொருட்கள் எரிந்து சேதமானது.

🕒 24 ஜூலை, 2026, 03:38 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
ராஜபாளையம் ரயில் நிலையம் அருகே போட்டோ ஸ்டுடியோவில் ஏற்பட்ட தீயில் லட்சக்கணக்கான பொருட்கள் எரிந்து சேதமானது. - படம் 1 - The News Outlook
📸1 / 1

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

*விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ரயில் நிலையம் அருகே போட்டோ ஸ்டுடியோவில் ஏற்பட்ட தீயில் லட்சக்கணக்கான பொருட்கள் எரிந்து சேதமானது.* விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மலையடிப்பட்டியை சேர்ந்தவர் விமல்ராஜ் 35, மாற்றுத்திறனாளி. ரயில்வே ஸ்டேஷன் அருகே TP மில்ஸ் சாலையில் இவருக்கு சொந்தமான போட்டோ ஸ்டுடியோ உள்ளது. இதில் ஜெராக்ஸ், கிப்ட் சென்டர் வைத்துள்ளார். மாலை 7 மணிக்கு கடை ஊழியர்கள் கடையை மூடி அருகே இருந்த டீ கடைக்கு சென்றுள்ளனர். அப்போது கடையிலிருந்து புகை வெளியேறியபடி இருந்துள்ளது. கடை ஊழியர்கள் வந்து பார்த்தபோது உள்ளே தீ கொழுந்து விட்டு எரிந்தது. அருகே நெருங்க முடியாததால் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்து நிலைய அலுவலர் முத்துச்செல்வம் தலைமையிலான வீரர்கள் கடையின் கதவை உடைத்து 45 நிமிடம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். இதில் கடையில் இருந்த ஜெராக்ஸ், கேமரா, கிப்ட் பொருட்கள் எரிந்து சேதமாகின. விபத்து காரணமாக TPமில்ஸ் மெயின் ரோட்டில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
மூலக்குறிச்சியில் ரூ.6 இலட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி தீவிரம்செய்திகள்

மூலக்குறிச்சியில் ரூ.6 இலட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி தீவிரம்

SRIDHAR🕒 நவ. 15
மாவீரர் நாள் பொதுக்கூட்டம் விழுப்புரத்தில் ஆலோசனைசெய்திகள்

மாவீரர் நாள் பொதுக்கூட்டம் விழுப்புரத்தில் ஆலோசனை

Arivazhagan🕒 நவ. 15
வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் கைதுசெய்திகள்

வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் கைது

Arivazhagan🕒 நவ. 15
அருள் வந்து ஆடிய சிவாச்சாரியார்கள்! அரியலூர் பாலமுருகன் ஆலயத்தில் பக்திப் பரவசத்தில் பக்தர்கள்ஆன்மீகம்

அருள் வந்து ஆடிய சிவாச்சாரியார்கள்! அரியலூர் பாலமுருகன் ஆலயத்தில் பக்திப் பரவசத்தில் பக்தர்கள்

D Velmurugan🕒 நவ. 15
பக்தி பரவசத்தில் பரமத்திவேலூர்! முருகப்பெருமானின் சூரசம்ஹார நிகழ்வு புகைப்படங்கள்ஆன்மீகம்

பக்தி பரவசத்தில் பரமத்திவேலூர்! முருகப்பெருமானின் சூரசம்ஹார நிகழ்வு புகைப்படங்கள்

SRIDHAR🕒 நவ. 15
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் திட்டங்கள்: நேரில் கள ஆய்வு மேற்கொண்ட அரியலூர் கலெக்டர்!விவசாயம்

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் திட்டங்கள்: நேரில் கள ஆய்வு மேற்கொண்ட அரியலூர் கலெக்டர்!

D Velmurugan🕒 நவ. 15
அரியலூரில் திரண்ட இளைஞர்கள்: அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டியை ஆட்சியர் தொடங்கி வைத்தார்!நகரங்கள்

அரியலூரில் திரண்ட இளைஞர்கள்: அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டியை ஆட்சியர் தொடங்கி வைத்தார்!

D Velmurugan🕒 நவ. 15
9 மணி நேர விசாரணைக்கு பின் மாஜிஸ்திரேட்டிடம் ஒப்படைக்கப்பட்ட போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்!தமிழ்நாடு

9 மணி நேர விசாரணைக்கு பின் மாஜிஸ்திரேட்டிடம் ஒப்படைக்கப்பட்ட போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்!

Vijay🕒 நவ. 15
TNO வாட்ஸ்அப் சானல் ➔